பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான வரியில் தளர்வு.. மத்திய அரசு அறிவிப்பு

18பார்த்தது
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான வரியில் தளர்வு.. மத்திய அரசு அறிவிப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் மத்திய அரசு தளர்வு அறிவித்துள்ளது. உள்நாட்டில் எரிபொருள் இருப்பை உறுதி செய்ய கடந்த மே 16ஆம் தேதி பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.3, டீசலுக்கு ரூ.16.50 என்ற அளவில் வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வரி பெட்ரோலுக்கு ரூ.1.50 ஆகவும், டீசலுக்கு ரூ.9.50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி