சென்னை புறநகர் ரயில் சேவையை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டிற்கான முக்கிய ரயில்வே திட்டத்திற்கு மத்திய ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அரக்கோணம்-செங்கல்பட்டு இடையேயான 68 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.993 கோடி மதிப்பீட்டில் 2-வது ரயில் வழித்தடம் (இரட்டை பாதை) அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய வழித்தட திட்டம் சென்னை சுற்றுவட்டார புறநகர் ரயில்
போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, விரைவான மற்றும் கூடுதல் ரயில் சேவைகளுக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:News18