ரஷ்யாவிடமிருந்து அதிநவீன S-400 வான் பாதுகாப்பு அமைப்பிற்கான 288 ஏவுகணைகளை சுமார் ரூ.10,000 கோடி மதிப்பில் வாங்க மத்திய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது S-400 அமைப்பின் சிறப்பான செயல்பாட்டை தொடர்ந்து, நாட்டின் வான் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய ராணுவத்தின் தற்காப்புத் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.