இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க, LPG கேஸ் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுபாடு ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எல்பிஜி உற்பத்திக்கு தேவையான Propane, Butane வாயுக்களை பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்கு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்தே அதிகம் இறக்குமதி செய்த நிலையில், போர் காரணமாக தடைபட்டுள்ளது.