நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ.3.14 உயர்ந்து ரூ.103.98-க்கும், டீசல் ரூ.3.11 உயர்ந்து ரூ.95.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், "கடந்த 4 ஆண்டுகளில் இதுவே முதல் விலை உயர்வு. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல் 3.2%, டீசல் 3.4% என மிகக் குறைந்த அளவிலேயே உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இந்த நடவடிக்கை முற்றிலும் அவசியமானது" என விளக்கியுள்ளார்.ட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.