பிஎப் ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்தும் மத்திய அரசு

23பார்த்தது
பிஎப் ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்தும் மத்திய அரசு
இபிஎஸ்-95 குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1,000-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்த மத்திய அறங்காவலர் வாரியம் (CBT) கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பிஎப் பங்களிப்பிற்கான அடிப்படைச் சம்பள வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.25,000-30,000 ஆக உயர்த்தவும், யுபிஐ மூலம் பிஎப் பணம் எடுக்கும் வசதியைக் கொண்டுவரவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இறுதி முடிவுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியம்.