இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

0பார்த்தது
சராசரி கடல் மட்டத்தில், தெற்கு குஜராத்தில் இருந்து மத்திய கேரளம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலுவுகிறது. இதனால் இன்றும், நாளையும் (ஜூலை 8, 9) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடின மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி