தமிழகத்தில் நாளை (அக்.07) கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழைப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.