தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்து வரும் நிலையில், இன்று (செப்.10) இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, விருதுநகர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.