தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.