தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (பிப்.25) 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, சிவகங்கை, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளார்.