தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று இரவு 7 மணிவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தமிழகத்தில் தி.மலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நெல்லை, குமரி, தென்காசி, தேனி மற்றும் விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால்பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.