தமிழ்நாட்டி இன்று (நவ.24) காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அரியலூர், கடலூர், மயிலாடுதுரை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, கோவை, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.