காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று (ஜன.11) பிற்பகல் 1 மணி வரை மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, ராணிப்பேட்டை, க.குறிச்சி, திருப்பத்தூர், தி.மலை, திருப்பூர், கோவை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திண்டுக்கல், தென்காசி, தேனி, கடலூர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 28மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.