வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.23) அரியலூர், கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விழுப்புரம், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், தேனி, நீலகிரி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 28 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.