கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

14பார்த்தது
மேற்குவங்கம் முதல் மன்னார் வளைகுடா வரை ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், தெலங்கானா, தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் இன்று (ஏப்., 08) தென் தமிழகம், வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தொடர்புடைய செய்தி