தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, தேனி, தூத்துக்குடி, நாகை, குமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (நவ., 12) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.