தமிழகத்தில் இன்று (மே.30) இரவு 10 மணி வரை 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், தருமபுரி, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தென்காசி, கோவை, நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, விழுப்புரம், ஈரோடு, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர், தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.