சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மீண்டும் NDA கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா என கேட்ட கேள்விக்கு, "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதிமுக ஒருங்கிணைப்பு பணிகளும் மும்மரமாக நடந்து வருகிறது" என கூறினார்.