மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று (பிப்.16) அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் 'கேட்ஸ் அறக்கட்டளை' வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் சுகாதார திட்டங்களை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது போன்ற திட்டங்களும் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.