2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான துரை.சந்திரசேகரன் அமைச்சர் பதவி எதிர்பார்ப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதே நேரத்தில், மக்கள் நீதி மய்ய இளைஞரணி மாநிலச் செயலாளர் பாடலாசிரியர் சினேகன், தனது சொந்த ஊரான திருவையாறு தொகுதியை பெற முயற்சி செய்து வருவதாகவும், இதற்காக கமல்ஹாசன் மூலம் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.