இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, சந்திரயான்-2 விண்கலம் மூலம் நிலவில் நீர் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை கண்டறிந்துள்ளது. கடந்த 2019 முதல் நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் அனுப்பிய நீர் பனிக்கட்டி மற்றும் மண்ணின் ரேடார் படங்களை ஆய்வு செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள், நிலவில் நீர் இருக்கும் இடத்தின் வரைபடத்தை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வுக்காக, 5 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட 14 லட்சம் ரேடார் தரவுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.