நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்த இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்திற்கு, உலகின் உயரிய விண்வெளி விருதுகளில் ஒன்றான 'காடர்ட் விண்வெளி விருது' வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஏராநாட்டிக்ஸ் அண்ட் ஏரோநாட்டிக்ஸ் அமைப்பு, இந்தியாவின் இந்த வரலாற்று சாதனையை பாராட்டி இவ்விருதினை அளித்து கௌரவித்துள்ளது.