சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் ‘முதல்வர் படைப்பகம்’ திட்டத்தின் பெயரில் மாற்றம் செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து, படைப்பகத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக வெளியிடப்பட்ட டெண்டர் ஆவணத்தில் ‘முதல்வர்’ என்ற சொல் நீக்கப்பட்டு, வெறும் ‘படைப்பகம்’ என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.