தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டணம் வசூலிக்கும் விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றங்களை அறிவித்துள்ளது. இன்று முதல் (பிப்., 15) அமலுக்கு வரும் இந்த மாற்றங்களின்படி, விரைவுச் சாலை முழுமையாக திறக்கப்படாத பட்சத்தில், கட்டுமானப் பணிகள் முடிந்து செயல்பாட்டில் இருக்கும் தூரத்திற்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். முடிக்கப்படாத விரைவுச் சாலைகளில், தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையான குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும்.