தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம், நாமக்கலில் வரும் 27ம் தேதி விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாமக்கல், சேலத்தில் 4 இடங்களில் மக்களை சந்திக்கவும், அதில் 2 இடங்களில் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார். நாமக்கல், சேலத்தில் டிச.13ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் தேதி மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை, திருவள்ளூரில் 27ம் தேதி விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார்.