தமிழகத்தில் புதிய மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தை மறுசீரமைப்பது குறித்துப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையிலான 17 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்களுக்கு ஏற்ற அதிநவீன அம்சங்களைச் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.