வேலூரில் 5,000 பேர் பங்கேற்கும் தவெக கூட்டத்திற்கு முதல்முறையாக பந்தல் அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலத்தில் தவெக தலைவர் விஜய் அண்மையில் பரப்புரை மேற்கொண்டபோது, கடும் வெயில் காரணமாக இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில், வேலூரில் 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பந்தல், நாற்காலிகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.