புஷ்பா 2 திரைப்பட நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் நடிகர் அல்லு அர்ஜுன், அவரது மேலாளர், தனிப்பட்ட ஊழியர்கள், 8 பாதுகாவலர்கள் உள்ளிட்ட மொத்தம் 23 பேர் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூடியிருப்பதை அறிந்தும் அங்கு சென்ற அல்லு அர்ஜுன் A11 ஆக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், அவரது மகன் படுகாயமடைந்தார்.