சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு செப். 8 முதல் 11 வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் இரவில் மலையில் தங்கவும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.