27 நாட்களில் கட்டுமான அனுமதி வழங்க சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

4969பார்த்தது
சென்னையில் கட்டுமான அனுமதி கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு, அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கும்பட்சத்தில் 18 நாட்களிலும், அதிகபட்சமாக 27 நாட்களுக்குள்ளும் அனுமதி வழங்க சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் இந்த புதிய காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, வெளிப்படையான முறையில் கட்டுமான அனுமதிகள் இனி மிக வேகமாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி