மெட்ரோ வேலைவாய்ப்பு: போலியான அறிவிப்புகளை நம்ப வேண்டாம்

7350பார்த்தது
மெட்ரோ வேலைவாய்ப்பு: போலியான அறிவிப்புகளை நம்ப வேண்டாம்
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், பணியாளர் தேர்வு எந்த தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ இணையதளம், தமிழ், ஆங்கில நாளிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு செய்தித்தாள்களில் மட்டுமே அறிவிப்புகள் வெளியிடப்படும். மின்னஞ்சல் முகவரிகள், மொபைல் எண்கள், WhatsApp அல்லது போலியான லெட்டர் ஹெட் மூலம் வரும் தகவல்கள் போலியானவை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி