சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, நாளை (மே.18) சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான
கிரிக்கெட் போட்டியை காணச் செல்லும் ரசிகர்களுக்கு சிறப்பு மெட்ரோ ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையம் வரை கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படுகிறது.