சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இன்று (அக்.19) திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டுவரப்பட்டது. அதில், 104 பயணிகள் மற்றும் 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 109 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இன்று காலை 10.45 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த திடீர் சம்பவத்தால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.