சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 'எம்.வி. சுப்ரா மோனார்க்' கப்பல் மூலம் ஒரே நாளில் 14,778 மெட்ரிக் டன் வார்ப்பு இரும்பு கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜூலை 30-ல் 13,208 டன் கையாளப்பட்டதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்த மைல்கல் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை எட்டியதற்காக துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சென்னை துறைமுகத் தலைவர்
சச்சின் எஸ். குர்வே பாராட்டு தெரிவித்துள்ளார்.