கமலாலயத்தில் ANI செய்தியாளரை ஒருமையில் அவமரியாதையாக பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள X தள பதிவில், 'பொது வாழ்வில் உள்ள அண்ணாமலை பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிப்பதும் அளிக்காமல் கடந்து செல்வதும் அவர் உரிமை. ஆனால் பத்திரிகையாளரை ஒருமையில் பேசி மிரட்டியுள்ளது முறையல்ல. அவரை வன்மையாக கண்டிக்கிறோம்' என கூறியுள்ளது.