சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு: 322 பயணிகள் தவிப்பு

8பார்த்தது
சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு: 322 பயணிகள் தவிப்பு
சென்னையில் இருந்து 322 பயணிகளுடன் இன்று (அக்.3) சிங்கப்பூர் புறப்பட தயாராக இருந்த பயணிகள் விமானத்தில் இயந்திர கோளாறு கண்டறியப்பட்டதால் விமானத்தின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விமானி மேற்கொண்ட பரிசோதனையின் போது இந்த தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்ட நிலையில், விமானம் தாமதமாக சிங்கப்பூர் புறப்படும் என விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி