சென்னையில்
போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் வாரத்தில் 2 நாட்கள் திடீர் வாகன சோதனை நடத்தப்படுகிறது. 122 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, 355
போக்குவரத்து போலீசார் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 443 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.