சென்னை அணி தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக கட்டாயம் வெல்ல வேண்டும். அப்படி வென்றால் சென்னை 16 புள்ளிகளை எட்டும். பெங்களூரு அணி தனது அடுத்த இரண்டு போட்டிகளில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளை வீழ்த்த வேண்டும். இப்படி நடந்தால் இரு அணிகளுமே 16 புள்ளிகளை பெற முடியாது. இதன் மூலம் சென்னை அணி மும்பை, லக்னோ, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளை விட புள்ளிகளில் முந்தி, எளிதாக டாப்-4 இடத்தைப் பிடித்து பிளே-ஆப் செல்லலாம்.