சென்னை: ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளைஞர்

134பார்த்தது
சென்னை: ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளைஞர்
சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற புறநகர் ரயில் நந்தியம்பாக்கம் - மத்திப்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, டிக்கெட் பரிசோதகர் சோதனையில் ஈடுபட்டார். டிக்கெட் இன்றி பயணித்த வடமாநில இளைஞர் ஒருவர், தப்பிக்க முயன்று வேகமாகச் சென்ற ரயிலில் இருந்து பிளாட்பாரத்தில் குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, ரயில்வே ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி