சென்னை கோயம்பேட்டில் உள்ள கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக கிடைத்த தகவலின் பேரில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் 16 குழந்தைகளை மீட்டனர். சிறுவர்களை பணிக்கு அமர்த்திய கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.