சென்னை: 400 கிலோவோல்ட் திறனில் மின்வழித் தடங்கள்.. மின்வாரியம்

54பார்த்தது
சென்னை: 400 கிலோவோல்ட் திறனில் மின்வழித் தடங்கள்.. மின்வாரியம்
பசுமை வழித்தடம் திட்டம் 3-ல், துணைமின் நிலையங்களுக்கு அதிக மின்சாரம் எடுத்துச் செல்லும் வகையில், 400 கிலோவோல்ட் திறனில் மின்வழித் தடங்களை மின்வாரியம் அமைக்க உள்ளது.

தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்களை அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. எனவே, தனியார் நிறுவனங்கள் அமைக்கும் பசுமை மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பல்வேறு பகுதிகளுக்கு மின்வாரியம் எடுத்துச் செல்கிறது. ஜெர்மனியின் கே. எஃப். டபிள்யூ. வங்கி உதவியுடன் பசுமை வழித்தடம் (கிரீன் காரிடார்) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.

பசுமை வழித்தடம் திட்டம் 1-ல் ரூ. 1, 100 கோடி செலவில்,  திண்டுக்கல் மாவட்டம், தென்னம்பட்டியில் 400 கிலோவோல்ட் மின்நிலையமும், தென்னம்பட்டி முதல் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வரை 400 கிலோவோல்ட் வரை இரட்டை சுற்று மின்வழித் தடமும் அமைக்கப்பட உள்ளன.

பசுமை வழித்தடம் திட்டம் 2-ல், ரூ. 1, 006 கோடி செலவில் திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரத்தில் 400 கிலோவோல்ட் துணைமின் நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும், திருப்பூரில் உள்ள பூளவாடி, கொங்கல் நகர், கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தலில் தலா 230 கிலோவோல்ட் திறனில் துணைமின் நிலையங்களும், அவற்றை இணைக்க அதே திறனில் வழித்தடங்களும் அமைக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி