சென்னை: வீட்டில் புகுந்து சிறுவனை கத்தியால் குத்திய கொடூரம்

3பார்த்தது
சென்னை: வீட்டில் புகுந்து சிறுவனை கத்தியால் குத்திய கொடூரம்
சென்னை சாலிகிராமத்தில், வாடகை பாக்கி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வீட்டு உரிமையாளர் கணேஷ் கோபாலின் 13 வயது மகனை வாடகைதாரர் பாஸ்கர் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் முதுகில் குத்திவிட்டு தப்பியோடிய பாஸ்கரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனுக்கு 31 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பாஸ்கரின் குடும்பத்தினர் வீட்டு உரிமையாளர் மீது பண மோசடி புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி