தமிழக முதலமைச்சர் விஜய் வரும் 22ம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு அன்றைய தினமே நாடு திரும்புகிறார். இந்த சந்திப்பின்போது தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் விஜய் சந்திக்க உள்ளார்.