சென்னையில் சாலையில் மயங்கி விழுந்த மாணவிக்கு உதவியதை வீடியோ எடுத்து யூடியூப்-ல் பதிவேற்றிய பாலா விக்னேஷ் என்பவர் மீது மாணவி புகார் அளித்துள்ளார். அனுமதியின்றி வீடியோவை பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அண்ணா நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்டென்ட்டுக்காக மாணவியின் அனுமதியின்றி வீடியோ பதிவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.