சென்னை: குழந்தைகளை காப்பாற்றி உயிரை விட்ட ஓட்டுநர்

6பார்த்தது
சென்னை: குழந்தைகளை காப்பாற்றி உயிரை விட்ட ஓட்டுநர்
சென்னை அண்ணா நகரில் பள்ளிக்கு குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற முருகன் (40) என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உயிர் போகும் நிலையிலும், அவர் ஆட்டோவை சாலையோரம் பத்திரமாக நிறுத்திவிட்டு மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மயக்க நிலையில் இருந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you