மயிலாடுதுறை அருகே மரத்தில் கார் மோதி சென்னை மருத்துவ கல்லூரி மாணவி ஹரிணி (20) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி பேராலயத்துக்கு குடும்பத்தினருடன் சென்றபோது, மயிலாடுதுறை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இதில் ஹரிணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் காயமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பெரம்பூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.