தமிழ் வருடப்பிறப்பு மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு மே 10-ந் தேதி 575 சிறப்பு பேருந்துகளும், 11-ந் தேதி 395 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு 10-ந் தேதி 100 பேருந்துகளும், 11-ந் தேதி 90 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திரும்ப வசதியாக, 12-ந் தேதி மற்றும் 14-ந் தேதி ஆகிய நாட்களில் 735 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.