சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் செயல்படும் 990 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள், மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி வினியோகம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இது அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு. வி. க. நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களை உள்ளடக்கியது.