கோயம்பேடு: மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்

4பார்த்தது
கோயம்பேடு: மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்
கோயம்பேடு, அண்ணா தெருவைச் சேர்ந்த கருப்புசாமி (45) என்பவர், தினமும் குடித்துவிட்டு மனைவி வாசுகி (40) உடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த கருப்புசாமி, மது அருந்த பணம் கேட்டுள்ளார். பணம் இல்லை என்று வாசுகி கூறியதால், ஆத்திரமடைந்த கருப்புசாமி, மூட்டை தூக்கும் இரும்பு கொக்கியால் மனைவியின் கை, முதுகு பகுதிகளில் சரமாரியாக கிழித்து காயப்படுத்தியுள்ளார். வாசுகி அளித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் கருப்புசாமியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி